இந்தியா

மின்வெட்டு.. செல்போன் வெளிச்சம் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்!!

Suaif Arsath

பீகாரின் சசரம் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் செல்போன் வெளிச்சத்தைக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட அவல நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சடார் மருத்துவமனை அமைந்துள்ள சசரம் பகுதியில் அடிக்கடி மணிக் கணக்கில் மின்வெட்டு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு செல்போன் வெளிச்சம் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற சூழல்களில் போராட வேண்டி உள்ளதாகவும் சடார் மருத்துவமனை மருத்துவர் பிரிஜீஷ்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.