இந்தியா

தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி...!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.   

தென் இந்தியாவில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மாநில வனத்துறை சார்பில் நடைபெறும் இப்பணி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்றும் இப்பணியில், யானைகளின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த வகையில்,  கோவை ஆனைமலை புலிகள் காப்பக வன கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய நான்கு வனசரகங்களில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதேபோன்று, தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் சொக்கம்பட்டி வனப்பகுதியில், யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில், வனத்துறையினர் 30 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஈரோடு மாவட்டம் கேபிசெட்டிப்பாளையம் அடுத்த தூக்க நாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில், வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.