இந்தியா

மருத்துவமனை கட்டிடத்தில் ஏறி ஊழியர்கள் போராட்டம்...புதுச்சேரியில் பரபரப்பு!

Tamil Selvi Selvakumar

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி ஒப்பந்த ஊழியர்கள் கட்டிடத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 650 ஒப்பந்த ஊழியர்கள் 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஆகஸ்ட மாதம் 399 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இந்த கோப்பு கையழுத்து ஆகாமல் தலைமை செயலகத்திலேயே கிடப்பில் உள்ளதாகவும், இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் எந்தவிதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என தெரிகிறது. 

இந்நிலையில் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் மருத்துவமனை கட்டிடத்தின் மீது ஏறி கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.