இந்தியா

29% அளவுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பு... மத்திய அரசு நடத்திய ஆய்வில் தகவல்...

நாடு முழுவதும் 29 சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆட தொடங்கியது.

தற்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல செயல்பட தொடங்கியுள்ளதை அடுத்து வேலைவாய்ப்புகள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.  நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலாண்டில் நாட்டின் வேலை வாய்ப்பு விகிதங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் நாடு முழுவதும் ஐடி, உற்பத்தி உட்பட 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் 29 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2013 - 14 நடத்தப்பட்ட ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பில் பிரதிபலித்த 2.3 கோடி வேலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 3.08 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
வேலைவாய்ப்பில் ஐடி துறை 152 சதவீத வளர்ச்சியும், சுகாதாரத்துறை 77 சதவீதம் வளர்ச்சியும், கல்வித்துறை 39 சதவீதம் வளர்ச்சியும், போக்குவரத்து 68 சதவீதம், கட்டுமான துறை 42 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.