இந்தியா

மதிப்பெண்கள் கணக்கிடும் அவகாசம் நீட்டிப்பு... சிபிஎஸ்இ அறிவிப்பு...

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிடும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளும் இன்று மதிப்பெண்களை கணக்கிட்டு அனுப்ப உத்தரவிட்டிருந்த நிலையில், கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் எந்தவித பதற்றமும் இன்றி மதிப்பெண்களை வழங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளும் கால தாமதமின்றி வரும் 25ம் தேதிக்குள் மதிப்பெண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், கடைசி நேர பரபரப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சிபிஎஸ்இ தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.