இந்தியா

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!!

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை ஜுலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை ஜுலை 31 ஆம் தேதி வரை நீட்டித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ஆம் தேதி வரை சர்வதேச விமான சேவைக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து சேவைக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இதே கட்டுப்பாடுகள் ஜுலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  அறிவித்துள்ளது. அதேநேரம் சர்வதேச கட்டுப்பாடு கொண்ட அனைத்து சரக்கு விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறையால்  அங்கீகரிக்கப்பட்ட விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.