இந்தியா

புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோவில் திறப்பு தேதி அறிவிப்பு…

மும்பையின் புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோவில் நாளை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.

Malaimurasu Seithigal TV

மும்பையின் புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோவில் நாளை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.

மும்பையின் பிரமாதேவி பகுதியில், அமைந்துள்ள புகழ் பெற்ற சித்தி விநாயகர் கோவில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. நாளை நவராத்திரி விழா தொடங்க உள்ளதை முன்னிட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் திறக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களும் கோவில் அறக்கட்டளையின் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்காக ஒவ்வொரு மணி நேரமும் 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.