இந்தியா

விவசாயிகள் படுகொலை சம்பவம் ‘கண்டனத்திற்குரியது’ - அமெரிக்காவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் படுகொலை சம்பவம் ‘கண்டனத்திற்குரியது’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் படுகொலை சம்பவம் ‘கண்டனத்திற்குரியது’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒரு வார அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், ஹார்வார்டு கென்னடி பள்ளியில் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

விவசாயிகள் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து பிரதமரோ, அமைச்சர்களோ பதிலளிக்காமல், தப்பித்துக்கொள்வதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், லக்கிம்பூர் படுகொலை சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியது என கூறினார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார். தற்போது பாஜக ஆட்சி என்பதால் இதுபோன்ற சம்பவங்களை மிகைப்படுத்தாமல், எப்போதும் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார்.