இந்தியா

தூங்கிக்கொன்டிருந்ந கொரோனா பாதித்த பெண்... ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த கொடுமை!!

Malaimurasu Seithigal TV

கொரோனா நோயாளிக்கு  பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.


கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்றில் இருந்து மீள பலரும் போராடி வருகின்றன. இந்நிலையில் இவர்களுக்கு உதவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடவுளாக இருந்து வருகின்றன. ஆனால்   ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். 

கொரோனா தொற்று பாதித்தவர்களை அச்சுறுத்தும் விதமாகா கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் வசிக்கும் 25 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குல்பர்காவில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நள்ளிரவில் கொரோனா வார்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பிரேம்சாகர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் கூச்சல் போட்டதை தொடர்ந்து, 23 வயதான பிரேம்சாகரை மற்ற நோயாளிகள் மடக்கிப்பிடித்தனர். மேலும் பிரமபூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொரோனா பரிசோதனைக்கு பின் பிரேம்சாகரிடம் விசாரணை நடத்தப்படும் என் தொரிவித்துள்ளனர்.