இந்தியா

இன்று முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம்...பீதியில் மக்கள்! 

அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

Malaimurasu Seithigal TV

அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. 

ஏடிஎம் பணப் பரிமாற்ற கட்டண முறையில் ஒரு சில மாற்றங்களை உலக வங்கிகள் அறிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும்,மாநகராட்சி பகுதிகளில் உள்ள வேறி சில வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறையும்,மாநகராட்சி அல்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்கலாம்.இதற்கு மேல் எடுத்தால் பணம் வசூலிக்கப்படும் இது தான் நடைமுறை.

இந்நிலையில், ஜனவரி 1 முதல் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு 20 ரூபாய் வரியாக இருந்த கட்டணம் 21 ரூபாய் வரியாக உயர்த்தப்பட உள்ளது என உலக வங்கிகள் அறிவித்துள்ளது. இது இலவச ஏடிஎம் பயன்பாட்டை தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.இந்த கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் ஏழை,நடுத்தர மக்கள் பீதியில் உள்ளனர்.