இந்தியா

அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ விபத்து...

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியளது.

Malaimurasu Seithigal TV

தெலங்கனா | ராம்கோபால் பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்டிடத்தில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. மளமளவென கட்டிடம் முழுவதும் பரவிய நிலையில் இதுகுறித்த தகவலின் பேரில் சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிவதால் தீயை அணைபபதில் சிக்கல் நீடித்தது. மேலும் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்ததால் வாகன ஓட்டிகள்  மற்றும் பொது மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.