இந்தியா

பந்திப்பூர் வனப்பகுதி புலிகள் சரணாலயத்தை பார்வையிட்ட முதல் இந்திய பிரதமர்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று கர்நாடகா மாநிலம் பந்திபூர்  வனப்பகுதி புலிகள் சரணாலயத்தை பார்வையிட்டார்.

சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, சென்னையில் இருந்தவாறே தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 

இதையடுத்து இரவில் தனி விமானம் மூலம் மைசூர் சென்ற அவர், இன்று கர்நாடக மாநிலம் பந்திபூர் வனப்பகுதி புலிகள் சரணாலத்தை பார்வையிட்டார். மேலும் சுமார் 22கிமீ தூரம் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியை சுற்றி பிரதமர் பார்வையிட்டதால், பந்திபூர் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பந்திபூர் வனப்பகுதி, புலிகள் சரணாலயத்தை சுற்றி பார்க்கும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.