இந்தியா

காங்கிரஸில் இணைந்தார் பாஜக முன்னாள் துணை முதல்வர்...!!

Malaimurasu Seithigal TV

கர்நாடகா முன்னாள் துணை முதலமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான லக்‌ஷ்மன் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்  வரும் மே மதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் விறுவிறுப்பாக பணியாற்றி வருகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை தனது வேட்பாளர் பட்டியலை இரண்டு கட்டமாக வெளியிட்டது. இதில் பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழக்கப்படதாததால், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அக்கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில், கர்நாடகா பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சர் லக்‌ஷ்மன் சவதி பாஜகவில் இருந்து விலகினார். மேலும் நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்த அவர் காங்கிரசில் இணைந்துள்ளார். இந்நிலையில் பாஜகவில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பெங்களூரில் உள்ள அதாணி தொகுதியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.