sudarshan-reddy 
இந்தியா

“இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி..” - கடைசி வர திருச்சி சிவா -னு தான சொன்னீங்க!!

தென் இந்தியாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சுதர்ஷன் ரெட்டி இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக ..

Saleth stephi graph

கடந்த ஜூலை 21 -ஆம் தேதி “'உடல்நலத்தை முன்னுரிமைப்படுத்தவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 67(அ) இன் படி, நான் இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன்' என்று ஜெகதீப் தன்கர் தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரின்  பதவிக்காலம் முடியவடையாத சூழலிலே அவர் பதவி விலகினார். இவரின்  இந்த ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு -வும் ஏற்றுக்கொண்டார். 

அவர் பதவி விலகிய 60 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மூலம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு புதியவர் நியமிக்கப்பட வேண்டும். ஆகவே வருகிற ஆகஸ்ட் 21 -அன்று தான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.  இந்த சூழலில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கு  சி.பி.ராதாகிருஷ்ணன் -ஐ பாஜக வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துள்ள சூழலில் காங்கிரசும் தங்களுடைய வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது.

நேற்று மாலை இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை அறிவிக்க நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.பி திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டது ஆனாலும் கடைசி நேரத்தில் தென் இந்தியாவை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சுதர்ஷன் ரெட்டி இந்தியா கூட்டணியின் பொது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 1946ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி தற்போதைய  தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் பிறந்தார்  சுதர்சன் ரெட்டி, தனது சட்டப் படிப்பை ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.

1971 -ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு  செய்த பின்னர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் ரிட் மற்றும் சிவில் வழக்குகளைக் கையாண்டார். நீதிபதியாவதற்கு முன்பு, இவர் மத்திய அரசுக்காகக் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும், உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்குச் சட்ட ஆலோசகராகவும், அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தொடர்ந்து 1993ம் ஆண்டு மே 2 -ம் தேதி சுதர்தன் ரெட்டி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியானார். பிறகு 1995 -ல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.