இந்தியா

இனி மூடுபனிக் காலங்களிலும் ரயில் சேவை தொடரும்...

Malaimurasu Seithigal TV

குளிர்காலத்தில் வட இந்தியாவில் அடர்ந்த மூடுபனி காரணமாக, ரயில் இயக்கங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு பல ரயில்கள் ரத்தும் செய்யப்படுகின்றன.  இதனால் பயணிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

குளிர்காலத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரயில்களின் வேகம் அடிக்கடி பாதிக்கப்படுவதுடன் பார்க்கும் திறனும் குறைவாக இருப்பதால் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.  தற்போது ரயில்வே இதற்கு ஒரு தீர்வு கண்டுள்ளது.  

ரயில்கள் தாமதமாகாமல் இருக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  ரயில் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அனைத்து ரயில்களிலும் பனிமூட்டம் பாதுகாப்பு சாதனங்களை கட்டாயமாக பொருத்துமாறு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

பனிமூட்டத்தில் ரயில்களின் பாதுகாப்பு மற்றும் சரியான நேரத்தில் இயக்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய லோகோ பைலட்டுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரயில் இயக்கத்தின் போது மூடுபனி காரணமாக மிகவும் மோசமாக இருந்தால், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கக்கூடிய அளவிற்கு வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என லோகோ பைலட்டுகளுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்