இந்தியா

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை...

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை அவரசர ஆலோசனை நடத்தவுள்ளார்.

Malaimurasu Seithigal TV

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை,. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ளது.  இந்நிலையில் இன்று மாலை கொரோனா பாதிப்பு நிலைமை குறித்து மறு ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களில் நிலைமை குறித்து பிரதமர் ஆய்வு செய்கிறார். 

மகாஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி விவாதிக்க உள்ளதாக  மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மும்பையில் கொரோனா அதிகரித்தாலும் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும்,  எனினும் பிரதமருடனான ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இறுதி  முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.