இந்தியா

இந்தியாவின் டிஜிட்டல் விதிகளுக்கு இணங்குவோம் ... கூகுள் ஒப்புதல்.. யூடியூப்பும் கட்டுப்பட்டதாக தகவல்!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க பிரபல கூகுள் மற்றும் யூடியூப் தளங்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகளுக்கு இணங்க சமூக தளங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த அவகாசமானது இன்று முடிவடைந்துள்ள நிலையில் மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு இணங்க  பிரபல கூகுள் மற்றும் யூடியூப் தளங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் சட்டமன்ற செயல்முறைகளை மதிப்பதாகவும், சட்டவிரோத உள்ளடக்கத்தை கொண்டுள்ள பதிவுக்கு எதிராக நியாயமான வழியில் போராடும் வகையில் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.