கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, குடியரசு தலைவரை சந்தித்து பேசியுள்ளார்.
கூகுள் மற்றும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால், அவரால் விருது வழங்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவ்விருது இந்திய தூதரகம் மூலமாக சுந்தர் பிச்சையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை இன்று குடியரசு தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது குடியரசு தலைவர் சுந்தர் பிச்சையிடம், 'உலக அளவில் இந்தியர்களின் திறமையை கொண்டு சென்றவர் சுந்தர் பிச்சை' என புகழாரம் சூட்டியுள்ளார். அதே நேரத்தில் உலகளாவிய டிஜிட்டல் கல்வியை இந்தியாவில் முன்னிலைப்படுத்துமாறு சுந்தர் பிச்சையிடம் குடியரசு தலைவர் கேட்டுக்கொண்டதாக குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு தலைவர் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் சுந்தர் பிச்சை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்...! அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு..!