இந்தியா

மதுபானங்களை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்ய அரசு அனுமதி.....!!

மதுபானங்களை செல்போன் செயலி, அரசின் இணையதளம் மூலம் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் என்று டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

டெல்லி சுங்கவிதிகள் 2021ன்படி, எல்-13, எல்-14 உரிமம் வைத்துள்ள மதுக்கடை உரிமையாளர்கள் மட்டும் மொபைல் செயலி, இணையதளம் மூலம் பெறும் ஆர்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று சப்ளை செய்யலாம் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் பரவல் டெல்லியில் குறைந்ததை அடுத்து, நேற்று முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக கட்டுமானப் பணியாளர்கள், தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மதுபானங்களை வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'எல்-13 வகை உரிமம் வைத்திருக்கும் கடைக்காரர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது இணையதளம் வாயிலாக மதுபானங்களை ஆர்டர் பெற்றால் அவர்களின் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது 

டெல்லியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.