கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள், மும்பை புறநகர் மின்சார ரயில்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயணிக்கலாம் என அம்மநில அரசு அறிவித்துள்ளது.
இதேபோல் புனே மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு 8 மணி வரை கடைகளை திறக்கவும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை உணவகங்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதிக்கேற்ப சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகவும் எனவே மக்கள் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி 3 ஆம் அலை வராமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ்தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.