இந்தியா

4 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை... சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது...

பெங்களூருவில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள்  மற்றும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று இரவு தொடர் கனமழை பெய்தது. சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல்  கொட்டித் தீர்த்த கனமழையால்,  நகரின் பல பகுதிகளில் மழை சூழ்ந்தது. மடிவாளா, பீ.டி.எம். லே அவுட், கோரமங்களா, பனசங்கரி, சிவாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்தது. வடிநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், சாலைகளில் மழை நீர் தேங்கி, ஏரி, குளம் போல் காட்சி அளித்தது.

இதில், வாகனங்கள் செல்ல முடியாததல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இருசக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் இன்ஜின் ஆப் ஆனதால், தள்ளிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. 

அத்துடன், குடியிருப்பு பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். தீபாவளி தினத்தன்று, பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், பண்டிகை கொண்டாட்டம் முடங்கியது.