கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி பகுதியில் FIRST STEP BABY WEAR என்னும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது..
இந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஓசூரில் இருந்து பேருந்து சென்று கொண்டிருந்தது. கோபசத்திரம் என்ற இடத்தில், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 5 ஆண்கள் 10 பெண்கள் என 15 பேர் காயங்களுடன் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் லாரி திடீரென சாலையில் நின்றதாலே விபத்து ஏற்ப்பட்டதாக கூறப்படும் நிலையில் சூளகரி போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.