இன்று காலை ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் உள்ள 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் தற்போது வரை 3 பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட 17 பேர் இறந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15 க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், குடியிருப்புகள் அருகருகே இருப்பதாலும், சாலைகள் விரிவாக இல்லாததாலும் தீயணைப்பு துறையினர் மிகவும் சிரமப்பட்டு குடியிருப்பு பகுதியை அடைத்தனர்.
குடியிருப்பு பகுதி முழுவதும் பரவி இருந்த தீயினை 11 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்து நீண்ட நேரத்திற்கு பிறகு அணைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்