இந்தியா

எனது வார்டு வளர்ச்சிக்காக உழைப்பேன் - திருநங்கை போபி...

Malaimurasu Seithigal TV

தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியை, மீண்டும் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றிய நிலையில், மக்கள் மட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால் என அனைவரும் படு குஷியில் ஆந்துள்ளனர். பாஜகவிடம் இருந்து தனது யூனியன் பிரதேசத்தை பெற்றுள்ள நிலையில், முதன்முறையாக தலைநகரில் வெற்றிப் பெற்ற ஒரு திருநங்கையாக சரித்திரம் படைத்த போபி, தனது சந்தோஷத்தைப் பத்திர்க்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

தனது பகுதியின் வளர்ச்சிக்காக பணியாற்றுவேன் என்று டெல்லி மாநகராட்சித் தேர்தலில், சுல்தான்புரி வார்டில் வெற்றி பெற்றுள்ள திருநங்கை போபி தெரிவித்துள்ளார். டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக சுல்தான்புரி ஏ பகுதியில் போட்டியிட்டு போபி வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் டெல்லி மாநகராட்சியின் முதல் திருநங்கை உறுப்பினர் என்ற வரலாறு படைத்தார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளரிடம் பேசிய போபி, தனது வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்த வெற்றியை  அர்ப்பணிப்பதாக கூறினார். 

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தனது நறியைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.