இந்தியா

அக்கு வேறு.. ஆணி வேறா.. 110 அக்கவுண்ட்டில் இருந்து.. பிரிச்சு பிரிச்சு திருடிய ICICI வங்கி மேனேஜர்!

அவங்களுக்கு தெரியாமலேயே குற்றவாளியோட குடும்ப உறுப்பினர்களோட நம்பர்களா மாற்றியிருக்கார்

மாலை முரசு செய்தி குழு

ராஜஸ்தானின் கோட்டா நகரில், ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து 4.58 கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாவில் வெளிச்சத்துக்கு வந்த பெரும் மோசடி

கோட்டாவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் ஸ்ரீராம்நகர் கிளையில் ரிலேஷன்ஷிப் மேலாளராக பணியாற்றிய ஒருவர், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை முறையாக பயன்படுத்தி, 41 வாடிக்கையாளர்களின் 110 வங்கி கணக்குகளில் இருந்து 4.58 கோடி ரூபாயை திருடியிருக்கார். இந்த மோசடி 2020-ல ஆரம்பிச்சு, 2023 வரை ரகசியமாக நடந்திருக்கு. திருடப்பட்ட பணத்தை பங்குச் சந்தையில், குறிப்பா டெரிவேடிவ்ஸ் (Futures and Options) பிரிவில் முதலீடு செய்திருக்கார், ஆனா அந்த முதலீடு தோல்வியடைஞ்சு எல்லா பணமும் இழந்து போயிருக்கு.

மோசடி எப்படி நடந்தது?

இந்த மோசடி, வாடிக்கையாளர்களுக்கு எந்த சந்தேகமும் வராதவிதமா, மிகவும் திட்டமிட்டு, தொழில்நுட்ப உதவியோட நடந்திருக்கு.

இதற்கு வாடிக்கையாளர்களின் மொபைல் நம்பர்களை, அவங்களுக்கு தெரியாமலேயே குற்றவாளியோட குடும்ப உறுப்பினர்களோட நம்பர்களா மாற்றியிருக்கார். இதனால, பண பரிவர்த்தனை பத்தின எஸ்எம்எஸ் அலர்ட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு போகாம, குற்றவாளிக்கு மட்டுமே வந்திருக்கு. ஒரு சிஸ்டத்தை உருவாக்கி, வாடிக்கையாளர்களுக்கு வரவேண்டிய OTP-களை தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்திருக்கார். இதனால, பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு எந்த தகவலும் தெரியலை.

வங்கியோட ‘User FD’ இன்டர்ஃபேஸை தவறாக பயன்படுத்தி, 31 வாடிக்கையாளர்களோட நிரந்தர வைப்பு (Fixed Deposits) கணக்குகளை உடைச்சு, 1.35 கோடி ரூபாயை திருடியிருக்கார். ஒரு மூத்த பெண்மணியோட கணக்கை ‘பூல் அக்கவுண்ட்’ மாதிரி பயன்படுத்தி, 3 கோடி ரூபாய்க்கு மேல அந்த கணக்கு வழியா பரிமாற்றம் செய்திருக்கார். அந்த பெண்மணிக்கு இத பத்தி எதுவுமே தெரியாது.

திருடப்பட்ட பணத்தை ICICI Direct, Zerodha (Kite) மாதிரியான பங்கு வர்த்தக தளங்களில் முதலீடு செய்திருக்கார். ஆனா, இந்த முதலீடுகள் தோல்வியடைஞ்சு, மொத்த பணமும் இழந்து போயிருக்கு.

மோசடி எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?

2023 பிப்ரவரி 15-ல், ஒரு மூத்த வாடிக்கையாளர் தன்னோட கணக்கில் இருந்து 3.22 கோடி ரூபாய் திருடப்பட்டிருப்பதை கண்டுபிடிச்சு, வங்கிக்கு புகார் கொடுத்திருக்கார். இதைத் தொடர்ந்து, ஐசிஐசிஐ வங்கியோட உள் தணிக்கை குழு விசாரணை நடத்தி, இந்த மோசடியை உறுதி செய்திருக்கு. பிப்ரவரி 18-ல், கோட்டாவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் டிசிஎம் கிளை மேலாளர் தருண் ததீச், உத்தியோக் நகர் காவல் நிலையத்தில் முறையாக புகார் பதிவு செய்திருக்கார்.

இந்நிலையில், மே 31, 2025-ல், குற்றவாளி தன்னோட சகோதரியின் திருமணத்தில் இருக்கும்போது, ராஜஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டிருக்கார்.

ஐசிஐசிஐ வங்கி, மோசடி கண்டுபிடிக்கப்பட்ட உடனே குற்றவாளியை வேலையிலிருந்து இடைநீக்கம் செய்து, காவல்துறையில் புகார் கொடுத்திருக்கார். “எங்க வாடிக்கையாளர்களோட நலன் எங்களுக்கு முக்கியம். மோசடி தெரிஞ்ச உடனே FIR பதிவு செய்தோம். பாதிக்கப்பட்டவங்களோட உண்மையான கோரிக்கைகள் தீர்க்கப்பட்டிருக்கு”னு வங்கி ஒரு அறிக்கையில் தெரிவிச்சிருக்கு.

மேலும், கோட்டா காவல்துறை, இந்த மோசடியில் வேறு யாராவது உடந்தையா இருந்தாங்களான்னு ஆராய்ந்து வருது. “இவ்வளவு இளம் வயசுல ஒருவர் தனியா இந்த அளவு மோசடி செய்திருக்க முடியாது, வேறு உடந்தையாளர்கள் இருக்கலாம்”னு கோட்டா காவல் கண்காணிப்பாளர் திலிப் சைனி கூறியிருக்கார். இந்த மோசடி பத்தி செய்தி பரவியதும், வங்கியில் பணம் வைச்சிருக்குறவங்க பயந்து, தங்களோட கணக்குகளை செக் பண்ண வந்திருக்காங்க.

காவல்துறை விசாரணையில், பெரும்பாலான பாதிக்கப்பட்டவங்க மூத்த குடிமக்கள்னு தெரிஞ்சிருக்கு. இவங்க பெரும்பாலும் டெக்னாலஜி பத்தி பெரிய அறிவு இல்லாதவங்க, தங்களோட பணத்தை நிரந்தர வைப்பு (FD) மாதிரியான பாதுகாப்பான முதலீடுகளில் வைச்சிருந்தவங்க. இந்த மோசடியால அவங்களோட சேமிப்பு பெரிய அளவுல பறி போயிருக்கு.

கற்பிக்கும் பாடம்

இந்த சம்பவம், வங்கி கணக்குகளின் பாதுகாப்பு பத்தி நம்மை யோசிக்க வைக்குது. வாடிக்கையாளர்களா நாம என்ன செய்யலாம்?

வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை அவ்வப்போது செக் பண்ணி, தெரியாத பரிவர்த்தனைகள் இருந்தா உடனே வங்கிக்கு தகவல் சொல்லணும். அதேபோல், வங்கி அக்கவுண்ட்களுக்கு டூ-ஃபேக்டர் ஆதென்டிகேஷன் (2FA) ஆன் பண்ணி, OTP பாதுகாப்பை உறுதி செய்யணும்.

வங்கியில் பெரிய பொறுப்பில் இருப்பவர்களே இப்பேற்பட்ட மோசடியை செய்தால், மக்கள் எவ்வளவு தான் விழிப்புணர்வோடு இருந்தாலும் ஏமாற்றப்படுவது குறையாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.