இந்தியா

14 வயதிற்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தால்....

Malaimurasu Seithigal TV

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் நபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

அசாமில் திஸ்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர்,  மாநிலம் முழுவதும் 23 சதவீத பெண்கள், அனுமதிக்கப்பட்ட வயதைவிட முன்னதாகவே திருமணம் செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.  5 ஆண்டுகளுக்குள் குழந்தைத் திருமணம் இல்லாத மாநிலமாக அசாமை மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு முதல் நடவடிக்கையாக 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

-நப்பசலையார்