இந்தியா

இந்திய பார் கவுன்சில் முக்கிய தீர்மானம்!

இந்த கோரிக்கைகள் தற்பொழுது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அவை பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சக அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பாக பார் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இந்திய பார் கவுன்சில் முக்கிய ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.  இதில் பல்வேறு மாநில பார் கவுன்சில்களில் இடம்பெற்றுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 65ல் இருந்து 67 ஆக உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அரசியல் சாசனத்தில் சட்ட திருத்தம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தீர்மானம் நிறைவேற்றம்

இந்த நிலையில் இந்த கோரிக்கைகள் தற்பொழுது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அவை பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய சட்டத்துறை அமைச்சக அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் தற்போதைய தலைமை நீதிபதியான யு.யு.லலித் அடுத்த இரண்டு ஆண்டிற்கு அப்பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.