இந்தியா

ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது.. தொற்று பாதிப்புக்கு 5 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு  3 ஆயிரத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Suaif Arsath

கொரோனா நிலவரங்களை தினசரி வெளியிட்டு வரும் மத்திய அரசு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  3 ஆயிரத்து 712 ஆக பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட ஆயிரத்து 123 அதிகம் என சொல்லப்பட்டுள்ளது.

இதனால் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 64 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளதாகவும்,  தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 509 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் தீவிர தொற்றுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 584 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு உள்ளதால், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 85 புள்ளி 13 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது வரை 193 புள்ளி 70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.