இந்தியா

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி.. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.

Suaif Arsath

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதுடன், தட்டுப்பாடும்  ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலக இருவரும் மறுத்து வரும் நிலையில், நாடு முழுவதிலும் இன்று பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அரசுப் பணியாளர்கள், கலைஞர்கள், பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், இலங்கை அரசுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.