இந்தியா

கொரோனாவால் வாழ்வாதாரம் இழப்பு... அதிகரித்த சிறுநீரக விற்பனை... 

கொரோனாவால் வாழ்வாதார இழப்பு, கடன் சுமை போன்ற காரணங்களால் மக்கள் தங்கள் சிறுநீரகத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

அசாம் மாநிலம் தரம்துல் கிராமத்தில் வாழ்வாதாரம் இழந்து வறுமையில்  வாடிய நபரிடம் இருந்து சிலர் சட்டவிரோதமாக சிறுநீரகத்தை பெற முயன்றது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார் உடல் உறுப்பு கடத்தல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொரோனாவால் வாழ்வாதாரம் இழப்பு, கடன் சுமையில் தவித்து வரும் ஏழை எளிய மக்களை குறி வைத்து இக்கும்பல் சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை பெறுவது தெரியவந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் கிராமப்பகுதிகளில் வறுமையால் உடல் உறுப்புகளை விற்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.