டெல்லி எய்ம்ஸ் மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், குறிப்பாக ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் டிஜிட்டல் திரைகள் பயன்பாட்டிற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அதிக டிஜிட்டல் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு 3 வயதிற்குள் ஆட்டிசம் போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதக்க தெரிவிக்கிறார்கள். 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல் மற்றும் கணினி திரை பயன்பட்டு நேரத்தை குறைக்க வேண்டும் என்றும், குறிப்பாக 3 வயதுக்கு முன்பு திரைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மருத்துவ நிபுணர்கள், மருத்துவ ஆட்டிசத்திற்க்கும், திரை நேரத்திற்கும் இடையே தெளிவான காரண தொடர்பு இல்லை என்று கூறினாலும், மெய்நிகர் ஆட்டிசம் உருவாக வாய்ப்புகள் உள்ளன. மெய்நிகர் ஆட்டிசம் என்பது குழந்தைகளுக்கு பேசுவதில் சிரமம், சமூகத் தொடர்பு குறைபாடு, பெயர் சொல்லி அழைத்தால் திரும்பாதது, கண் தொடர்பு இல்லாமை, ஒரே பொருளைக் கவனிப்பது மற்றும் எதிலும் ஈடுபாடு இல்லாமல், உணர்ச்சி ரீதியாக பதிலளிக்காமல் இருப்பது போன்ற குறைபாடுகள் ஆகும்.
ராய்ப்பூர் எய்ம்ஸ் ஆராய்ச்சியாளர்கள், 5 வயதுக்குட்பட்ட 2,857 குழந்தைகளை ஆய்வு செய்து, ஒரு நாளைக்கு சராசரியாக 2.22 மணி நேரம் திரை நேரத்தில் செலவிடுவதாக கண்டறிந்தனர். இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த நேரத்தை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பவும், அவர்களின் அடம்பிடிப்புகளைச் சமாளிக்கவும், பரபரப்பான நேரங்களில் அவர்களை சமாளிக்கவும் அல்லது தங்களுக்குச் சிறு ஓய்வு நேரங்களை உருவாக்கிக் கொள்ளவும் டிஜிட்டல் திரையை பயன்படுத்துகின்றனர். இது குறுகிய காலத்திற்கு உதவக்கூடும் என்றாலும், இதன் அதிகப்படியான பயன்பாடு குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியை தடுக்க கூடும்.
ஆராய்ச்சியாளர்கள், 3 முதல் 18 வயதுக்குட்பட்ட, இயல்பாக வளரும் 50 குழந்தைகள் உட்பட, ஆட்டிசம் பாதிப்புள்ள 150 குழந்தைகளை மாதிரியாகப் பயன்படுத்தினர். இந்த ஆய்வு, அவர்களின் டிஜிட்டல் பயன்பாட்டை மட்டுமல்லாமல், அவர்களின் உளவியல் மற்றும் நடத்தை சார்ந்த தாக்கங்களிலும் கவனம் செலுத்துகிறது. ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் சிறு வயதிலேயே அதிக டிஜிட்டல் திரை பயன்பாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.என்ற கருத்துக்களையே இந்த ஆய்வின் முடிவுகள் கொடுத்தன. சிறு வயதில் திரைகளைப் பார்ப்பதற்கு ஆட்டிசத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை இந்த ஆய்வுகள் கண்டறிந்தது. ஆனால் அதுவே ஆட்டிசத்திற்கான காரணம் என்பதை நிறுவவில்லை.
ஆட்டிசம் என்பது தகவல் தொடர்பு மற்றும் சமூக அணுகுமுறையை பாதிக்கும் ஒரு நரம்பியல் வளர்ச்சி குறைபாடு ஆகும். அறிவாற்றல் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சிக்கு குழந்தைப் பருவத்தின் ஆரம்ப காலம் மிகவும் முக்கியமானது. தாமதமான பேச்சு மற்றும் இயர்லி லேர்னிங் திறன்களை இழத்தல் ஆகியவை ஆட்டிசத்தின் அறிகுறிகளாகும். மேலும் இந்த டிஜிட்டல் திரை பயன்பாடு ஆட்டிசம் மட்டுமல்லாமல், கண் பார்வை குறைபாடு மற்றும் உடலின் பல்வேறு உறுப்புகளை இயக்க கற்றுக்கொள்ளாமை போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஷெஃபாலி குலாட்டி என்பவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) குழந்தைகள் நரம்பியல் பிரிவின் தலைவரும், பேராசிரியருமான, இவர் குழந்தைகளின் டிஜிட்டல் திரை பயன்பாடு ஆட்டிசம் போன்ற வளர்ச்சி பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார். மேலும் முதல் 18 மாதம் வரை குழந்தைகளுக்கு கட்டாயம் திரை பயன்பாடு இருக்க கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்