இந்தியா

இந்தியா - இங்கிலாந்து பிரமாண்ட போர் பயிற்சி... அரபிக்கடலில் தொடங்கியது...

அரபிக்கடலில் இந்தியா-இங்கிலாந்து பிரமாண்ட முப்படை போர் பயிற்சி தொடங்கியது.

Malaimurasu Seithigal TV

அரபிக்கடலில் கொங்கன் கடல் பகுதியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான பிரமாண்ட முப்படை போர் பயிற்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. 

‘கொங்கன் சக்தி’ என்ற இப்பயிற்சி ஒரு வாரம் நடக்கிறது. இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்திய தரப்பில் ஐ.என்.எஸ். சென்னை உள்ளிட்ட போர்க்கப்பல்களும், மிக், சுகோய் ரக போர் விமானங்களும் கலந்துகொண்டுள்ளன.

அதுபோல், இங்கிலாந்து தரப்பில் எச்.எம்.எஸ்.குயின் எலிசபெத் என்ற பிரமாண்ட போர்க்கப்பலும், போர் விமானங்களும் பங்கேற்றுள்ளன.