இந்தியா

உலகளவில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க ஐநாவுக்கு இந்தியா வழங்கிய கோடி எவ்வளவு தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தியா 6 புள்ளி 18 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

Tamil Selvi Selvakumar

உலகெங்கிலும் வசிக்கும் இந்தி பேசும் மக்களென கடந்த 2018ம் ஆண்டு இந்தியா, ஐநா திட்டத்தை தொடங்கியது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் பற்றிய தகவல்கள் இந்தி மொழியில் வழங்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து ஊக்குவிப்பதற்காக இந்தியா சுமார்  6 கோடியே 18 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இந்தியாவிற்கான நிரந்தர துணை பிரதிநிதி ரவீந்திரா  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதவரிடம் வழங்கினார்.