காஷ்மீரின் பாகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 இந்தியரக்ள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தானின் செயலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்திய ;ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது நேற்று பாகிஸ்தான் திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது, ஆனால் s- 400 வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்நிலையில் இந்திய கடற்படை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் வசிக்கும் எல்லையோர மக்கள் பதுங்கு குழிகளில் இறங்கி உள்ளனர்.
நாட்டின் முக்கியமான கடல் கேந்திரங்களில் வீரர்கள் ரோந்து பணியில் உள்ளனர். விடிய விடிய தாக்குதல் நடந்ததால் எல்லையோர மாநில மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்