இந்தியா

புதுச்சேரி கடல் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு...காரணம் இது தான்!

சுருக்குமடி வலையை கொண்டு மீன் பிடிக்கும் படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்திற்குள் வரக்கூடாது என வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தினர் முடிவு செய்தனர்.

Malaimurasu Seithigal TV

மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை.

சுருக்குமடி வலை

ஆனால் சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் மீன் வளம் பாதிக்கும் அபாயம் உள்ளது. சுருக்குமடி வலை பயன்பாட்டிற்கு பல மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சில மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி வருகின்றனர். விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது.

கிராம பஞ்சாயத்தின் முடிவு 

இந்த நிலையில் சுருக்குமடி வலையை கொண்டு மீன் பிடிக்கும் படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடித்துறைமுகத்திற்குள் வரக்கூடாது என மீனவ கிராமமான வீராம்பட்டினம் பஞ்சாயத்து முடிவு செய்தனர். இது புதுச்சேரியின் பெரிய மீனவ கிராமம் ஆகும். இந்த விவகாரம் தொடர்பாக பதற்றம் ஏறப்ட்டதால் வீராம்பட்டினம், நல்லவாடு, பன்னித்திட்டு மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மோதலை தவிர்க்க பேச்சுவார்த்தை

மீனவர்களுக்குள்ளான மோதலை தவிர்க்க அரசு தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித ஒருமித்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடித்துக்கொண்டு தேங்காய் திட்டு துறைமுகத்திற்குள் நுழைய முயலும் படகை தடுத்து நிறுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடலில் கண்காணிப்பு

மேலும் நடுக்கடலில் மோதல் நடக்காத வண்ணம் கண்காணிப்பதற்காக கூடுதல் காவல்துறை இயக்குனர் ஆனந்தமோகன் தலைமையில் கடலோரக்காவல் படை போலீசாரும், இந்தியகடலோராகவல் படை அதிகாரிகள் என ஏராளமான போலீசார் படகில் சென்று நடுக்கடலில் கண்காணிப்பு பணியில ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.