கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பகுதியில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது..
இந்த தாக்குதலை நிகழ்த்தியது பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா உடன் தொடர்புடைய The Resident Front - என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது..ஆனால் பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் இருநாடுகளும் சிந்து நதி நீர், சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டன..
“சிந்து நதி நீரை நிறுத்தியது போருக்கான அறைகூவல், இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” எனஎன பாகிஸ்தான் இந்தியாவை சாடியுள்ளது.
இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய கடற்படை 5 போர்கப்பல்களின் புகைப்படங்களை வெளியிட்டு “ஒன்று சேர்ந்து ஆற்றலை வெளிப்படுத்துவோம் தேசியப்பணிக்கு தயார்” என்ற பதிவை வெளியிட்டுள்ளது.. இதனால் எல்லையில் பொற்பாதற்றம் அதிகரித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்