இந்தியா

ஒமிக்ரான் மரபணு கூறுகளை அடையாளம் கண்டு சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள்...

சர்வதேச அளவில் மைல்கல் சாதனையாக ஒமிக்ரான் மாறுபாட்டின் மரபணு கூறுகளை இந்திய விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். 

Malaimurasu Seithigal TV

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வகை இந்தியாவில் சுமார் 21 மாநிலங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் முழு அளவை செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் மாறுபாட்டின் மரபணு கூறுகளை கண்டறியப்படாததால் தடுப்பூசிகள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அளவிட முடியாமல் சர்வதேச விஞ்ஞானிகள் திணறி வந்தனர்.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில் மைல்கல் சாதனையாக ஒமிக்ரான் மாறுபாட்டின் மரபணு கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒமிக்ரானுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்திறனை அளிக்க கூடும் என்பதை அளவிட முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.