இந்தியா

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தல்...! தலைவர் பதவிக்கு தேர்வான ஐசரி கணேஷ்...!

Malaimurasu Seithigal TV

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டி நடைபெற்றது.

இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் இன்று டெல்லி இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவருமான ஐசரி கே. கணேஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சுப்பிரியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

ஐசரி கே. கணேஷுக்கு ஆதரவாக 20 மாநிலங்களும், சஞ்சய் சுப்பிரியவுக்கு ஆதரவாக 15 மாநிலங்களும் வாக்களித்துள்ளனர். மேலும் ஐசரி கே. கணேஷ் அணியில் செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் (5), இணை செயலாளர்கள் (3), உறுப்பினர்கள் என அனைவரும் வெற்றி பெற்று இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் தனி முத்திரை பதித்தனர்.