"இந்தியாவின் சிறந்த CM ஸ்டாலின்" - அபிஜித் தீப்கே சொன்னது என்ன? 
இந்தியா

"இந்தியாவின் சிறந்த CM ஸ்டாலின்" - அபிஜித் தீப்கே சொன்ன காரணம் தெரியுமா?

அபிஜித் தீப்கே கூறிய மூன்று முதலமைச்சர்களும் தற்போது பதவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை முரசு செய்தி குழு

காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவரான அபிஜித் தீப்கே ஒரு தனியார் தொலைக்காட்சியில், இந்தியாவில் சிறப்பாக செயலாற்றியதாக தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முன்னாள் முதலமைச்சர் பினாராயி விஜயன் ஆகிய மூன்று தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

இது குறித்து விளக்கமாக பேசிய அபிஜித், "மு.க. ஸ்டாலின் தமிழகப் பொருளாதாரத்திற்கு சிறப்பாகச் செயல்பட்டார், பினராயி விஜயன் கேரளாவின் சுகாதாரத் துறையில் சிறப்பாகப் பணியாற்றினார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்வி தொடர்பாக நல்ல பணிகளைச் செய்தார்." என்றார்.

அபிஜித் தீப்கே கூறிய மூன்று முதலமைச்சர்களும் தற்போது பதவியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி, விடி சதீசன் முதலமைச்சராக உள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. குறிப்பாக விஜய் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரங்கள் மூலமாகவே ஆட்சியைக் கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்

டெல்லியில் பாஜக வெற்றி பெற்று ரேகா குப்தா முதலமைச்சராக இருக்கிறார்.

இதைக் குறிப்பிட்டு தீப்கேவை விமர்சித்துள்ளார் சமீபத்தில் பாஜகவிலிருந்து வெளியேறிய ஷெஹ்சாத் பூனாவாலா. "இந்த மூவரும் தங்கள் மாநில மக்களால் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர்கள். அதனால், மக்களால் நிராகரிக்கப்பட்ட முதலமைச்சர்களை சி.ஜே.பி விரும்புகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியிலிருந்து 'ஜனதாவை' நீக்க வேண்டும்; அது வெறும் ‘கரப்பான்பூச்சி கட்சி’ என்று அழைக்கப்பட வேண்டும், ஏனெனில் மக்கள் (ஜனதா) வேறு ஒரு முடிவை எடுத்துவிட்டனர்." எனக் கூறியுள்ளார் அவர்.

இத்துடன் தனது வாதத்துகாக, ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தின் பொதுக் கடன் அதிகரித்ததையும், விஜயன் ஆட்சியில் கேரளாவில் ஏற்பட்ட கோவிட்-19 மரணங்களையும், கெஜ்ரிவால் ஆட்சியில் மதுபானக் கடைகளின் பெருக்கத்தையும் பூனாவாலா சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.