உலகில் இந்தியாவின் மதிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதாரத்திலும் இந்தியா பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.
மத்திய தொழில் முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உலகில் இந்தியாவின் மதிப்பு வேகமாக முன்னேறி வருகிறது எனக் கூறியுள்ளார். இந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜீவ் சந்திரசேகர், கொரோனா தொற்று இந்தியா உட்பட பல நாடுகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அந்த நிச்சயமற்ற நேரத்திலும் இந்தியா தனது மக்களுக்காகவும் பல நாடுகளுக்காகவும் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை சரியான நேரத்தில் பலப்படுத்தவும் தயார் செய்யவும் முடிந்தது என பெருமையாக கூறியுள்ளார்.