இந்தியா

பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ள இந்தோனேஷியா...! இதனால் விலை குறையுமா...?

பாமாயில் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க இந்தோனேஷியா திட்டமிட்டுள்ளதால், அதன் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளன.

Tamil Selvi Selvakumar

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படும் பாமாயில், இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அண்மையில் அங்கு நிலவிய கடும் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தற்காலிகமாக பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா அரசு தடை விதித்தது.

இதனால் 3 வாரங்களாக இறக்குமதி இன்றி, பாமாயின் விலையை சமையல் எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் உயர்த்தின. இந்தநிலையில் இந்தோனேஷியா அரசு மீண்டும் பாமாயில் ஏற்றுமதியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதன் உறுதிப்பட தகவல் கிடைத்ததும், தொழில்துறை எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் அதுதொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளது.