இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்...

ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாத செயலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களை களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய புலாய்வு முகமை, இன்றும் பல்வேறு இடங்களில் சோதனையை நடத்தி வருகிறது.

Malaimurasu Seithigal TV

ஜம்முவில் மீண்டும் பயங்கரவாத அச்சுறுத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர், பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இதனிடையே பயங்கரவாத செயலுக்கு உள்ளூர் மக்களும் சிலர் உதவுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வரும் அதிகாரிகள், இன்றும்  பல்வேறு இடங்களில் சோதனையை முடுக்கி விட்டுள்ளனர். இதனிடையே பூஞ்ச் பகுதியில் தொடர்ந்து 12வது நாளாக, பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.