இந்தியா

பட்டம்விடும் திருவிழா கோலாகலம்; பார்வையாளர்கள் உற்சாகம்...

Malaimurasu Seithigal TV

குஜராத் | அகமதாபாத்தில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த 125க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

ஸ்மைலி, சிறகடித்து பறக்கும் பருந்து, பச்சைக் கிளி, கடல் வாழ் உயிரினங்கள், பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகள் என பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டிருந்த பட்டங்கள் வானில் வட்டமிட்டன.

திரும்பிய பக்கமேல்லாம் வண்ணமயமாக காணப்பட்ட பட்டங்களின் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில், ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துவதை குறிக்கும் வகையிலும் பட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.