இந்தியா

பலவீனம் அடைகிறதா காங்கிரஸ்?!! பாஜகவில் இணையும் எம்.எல்.ஏக்கள்!!தொடரும் பதவி விலகல்கள்!!

Malaimurasu Seithigal TV

கோவாவில் 2022 சட்டமன்ற தேர்தல் மூலம் பாஜக 21 இடங்களை கைப்பற்றியது.  ஆட்சி அமைக்க பெரும்பான்மையான எண்ணிக்கை 21 என்ற காரணத்தால் ஆட்சியிலும் அமர்ந்தது.  காங்கிரஸ் 2022 சட்டமன்ற தேர்தலில் 11 இடங்களைக் கைப்பற்றியது.  மற்ற கட்சிகள் கூட்டணி அமைக்க முன் வராத காரணத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

இந்திய ஒற்றுமை பயணம்:

இந்தியாவை ஒற்றிணைப்போம் என காங்கிரஸ் சார்பில் 150 நாள் ராகுல் காந்தி தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கோவாவில் 11 எம்.எல்.ஏக்களில் 8 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கோவாவின் பாஜக தலைவர் சதானந்த் சேத் கூறியிருந்தார்.  அவர்களது முழு விருப்பத்துடனே இணைய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பாஜகவில் இணைவு:

பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த 8 எம்.எல்.ஏக்களும் இன்று கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சாவன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.

”காங்கிரஸின் ஒற்றுமை பயணம் தற்போது கோவாவில் நடந்து வருகிறது” கோவாவின் முதலமைச்சர் பிரமோத் சாவன் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏக்கள்:

திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ள எம்.எல்.ஏக்கள் ஆவர்.

பலவீனம் அடைகிறதா காங்கிரஸ்?

கடந்த சில மாதங்களில் ராஜிந்தர் பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்கள்தொடர்ந்து  பதவி விலகி கொண்டே இருக்கின்றனர்.  ஜி-23 அமைப்பின் முக்கிய தலைவர்களான குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் பதவி விலகியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகரும் கட்சியிலிருந்து விலகினார். இந்த பதவி விலகல்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.  

மூத்த தலைவர்களை இழந்த காங்கிரஸ் பலவீனமாகுமா இல்லை இளைஞர்களால் மீண்டும் கட்டமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிகிறது.  இந்நிலையில் மாநிலங்களில் எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சிகளில் இணைவது கட்சியை மேலும் வலுவிழக்க செயலாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.