இந்தியா

தேர்தலுக்காக கெஜ்ரிவால் ஆன்மிக பயணமா? மத்திய அமைச்சர் விமர்சனம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்முறையாக வருகிற 26-ம் தேதி அயோத்தியா செல்கிறார்.

Malaimurasu Seithigal TV

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்முறையாக வருகிற 26-ம் தேதி அயோத்தியா செல்கிறார்.

உத்திரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை காரணம் காட்டி அம்மாநிலத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், இரு நாள் பயணமாக அம்மாநிலத்திற்கு வருகிற 25-ம் தேதி செல்லும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், மறுநாள் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சிறப்பு வழிபாடிற்கு பின், புகழ்பெற்ற அனுமன் ஹார்கி கோயிலுக்கும் செல்கிறார். இத்தகவலை டெல்லி முதல்வர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இந்தநிலையில், கெஜ்ரிவாலின் திடீர் ஆன்மிக பயணத்தை விமர்சித்துள்ள மத்திய இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, தேர்தல் என்றதும் பலர் கோயில்களுக்கு படையெடுப்பதாக கூறியுள்ளார். அவர்கள் மக்களின் வாக்குகளால் மட்டுமல்லாமல், கடவுளாலும் ஆசீர்வதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.