கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டப்பின் வழங்கப்படும் சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுள்ள ஹாட்ஸ்பாட் இடங்களை கண்டறிய உதவும் ஆரோக்கியசேது ((Arogya setu)) செயலி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் இருப்பின், கோவின் இணையதளத்துக்கு சென்று லாகின் செய்து, பிரச்னை இருப்பதாக தெரிவிக்கலாம்.
அதனைத்தொடர்ந்து திரையில் தெரியும் ‘கரக்ஷன் இன் சர்டிபிகேட்’ என்பதை கிளிக் செய்து திருத்தம் செய்யலாம். பெயர், பாலினம், பிறந்த தேதி இவற்றில் ஏதாவது இரண்டில் மட்டுமே திருத்தம் செய்ய முடியும் எனவும், அதுவும் ஒரே ஒரு முறை தான் இந்த திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தம் செய்த பின் புதிய சான்றிதழை கோவின் தளத்திலேயே பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.