மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலின் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, ஜெட் எரிபொருள் அல்லது விமான டர்பைன் எரிபொருளின் விலைகள் திங்கட்கிழமை திருத்தி அமைக்கப்பட்டன.
ஏடிஎஃப் (ATF) விலை ஒரு கிலோலிட்டருக்கு ரூ.110,703.08 அல்லது 114.5 சதவீதம் உயர்த்தப்பட்டு, ரூ.207,341.22 ஆக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலின் காரணமாக ஜெட் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வால், விமான பயணசீட்டுக் கட்டணங்களும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்ட ஆரம்பத் தரவுகள், ஏடிஎஃப் விலைகளில் கடுமையான உயர்வைச் சுட்டிக்காட்டியதால், பயணச்சீட்டு கட்டணங்கள் கடுமையாக உயரும் என்ற கவலைகள் மக்களிடையே எழுந்துள்ளன. இருப்பினும், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விலை உயர்வு படிப்படியாக இருக்கும் என்று அரசாங்கம் பின்னர் தெளிவுபடுத்தியது. மேலும், பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மேற்கு ஆசிய மோதல் காரணமாக ஏற்கனவே பல சவால்களைச் சந்தித்து வரும் விமான நிறுவனங்களின், கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளை இந்தக் கடுமையான விலை உயர்வினை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால், கடந்த மாதம் இந்திய விமான நிறுவனங்கள் பயணச்சீட்டுகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதித்தன. ஆனால், இந்தியாவிற்குள் பயணம் செய்யும் பயணிகளுக்கு, இந்த உடனடி பாதிப்பு குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் மிகப்பெரிய செலவினங்களில் ஒன்றாகும், ஆனால் இந்த விலை உயர்வின் ஒரு பகுதி மட்டுமே வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளதால், குறுகிய காலத்தில் விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு விலைகளைத் திடீரென உயர்த்த வாய்ப்பில்லை என்றும் தேவைப்பட்டால், ஏதேனும் கட்டண மாற்றங்கள் உடனடியாக இல்லாமல் படிப்படியாகவே செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு 25 சதவீதம் அல்லது லிட்டருக்கு ரூ.15 என்ற அளவில் பகுதி மற்றும் படிப்படியான விலை உயர்வை மட்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.