இந்தியா

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளதாக தகவல்

போர் சூழலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 12-வது நாளாக தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிரான ஐநா-வின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் வரவேற்றிருந்தன.

மேலும் உக்ரைனில் நிலவும் போர் சூழல் குறித்து பிரதமர் மோடி கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியிருந்தார். அப்போது போரின் நிலவரம் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, போரில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.