சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 490 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 92 ரூபாய்க்கும், பார் வெள்ளி 500 ரூபாய் குறைந்து 92 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.