இந்தியா

கர்நாடகா பாஜக எம்.எல்.ஏ திடீர் மரணம்..!!!

Malaimurasu Seithigal TV

கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார். 

உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.  அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் தொற்று ஏற்கனவே இருந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

இன்று காலை காலமானதைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பொம்மை அவரது ட்விட்டரில், “எங்கள் கட்சியின் எம்எல்ஏவும் மாநில சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும், இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார்.

 -நப்பசலையார்